ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா - 15 நாள்‌ ஹத யோகா பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!

84 தரைப்படை வீரர்கள்‌ மற்றும்‌ 20 கப்பற்படை வீரர்கள்‌ உட்பட 104 இந்திய பாதுகாப்புப்‌ படை வீரர்கள்‌ கோவை ஈஷா யோக மையத்தில்‌ 15 நாள்‌ ஹத யோகா பயிற்றுநர்‌ பயிற்சியை செப்‌டம்பர் 15ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தனர்‌.


கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்றுநராக்கும் 15 நாள் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்திய ராணுவத்தின்‌ தெற்கு பிராந்திய படைப்‌ பிரிவும்‌, ஈஷா யோக மையமும்‌ இணைந்து நடத்தும்‌ ராணுவ வீரர்களுக்கான சிறப்பு யோகா வகுப்புகள்‌ கடந்த சுதந்திர தினத்தன்று ஆகஸ்டு 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்‌ மூலம்‌ சென்னை, பெங்களுரு, செகந்தராபாத்‌, மும்பை, புனே, அகமதாபாத்‌, குவாலியர்‌, ஜான்சி உள்ளிட்ட இடங்களில்‌ பணியாற்றும்‌ சுமார்‌ 10,000 ராணுவ விரர்களுக்கு ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள்‌ இலவசமாக யோகா கற்றுக்கொடுத்தனர்‌.



இதன்‌ அடுத்தகட்டமாக, ராணுவ வீரர்களையே ஹத யோகா பயிற்றுநர்களாக மாற்றும்‌ 15 நாள்‌ ஹத யோகா பயிற்றுநர்‌ வகுப்பு கோவை ஈஷா யோக மையத்தில்‌ செப்‌.1-ம்‌ தேதி முதல்‌ செப்‌.15-ம்‌ தேதி வரை நடைபெற்றது.



இதில்‌ தரைப்படையின்‌ தெற்கு பிராந்திய படைப்‌ பிரிவில்‌ பல்வேறு இடங்களில்‌ பணியாற்றும்‌ 84 ராணுவ வீரர்கள்‌ மற்றும்‌ விசாகப்பட்டினம்‌, கொச்சின்‌, டெல்லி, அந்தமான்‌ நிக்கோபார்‌ தீவு ஆகிய இடங்களில்‌ பணியாற்றும்‌ 20 கப்பற்படை வீரர்கள்‌ பங்கேற்றனர்‌.

அவர்களுக்கு சூர்ய க்ரியா, அங்கமர்த்தனா மற்றும்‌ உப யோகா வகுப்புகள்‌ கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும்‌, அவர்கள்‌ தங்கள்‌ படைப்‌ பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும்‌ வழங்கப்பட்டது.

இவ்வகுப்பில்‌ கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளை ராணுவ விரர்கள்‌ தினமும்‌ செய்வதன்‌ மூலம்‌ தங்கள்‌ பணியில்‌ எதிர்கொள்ளும்‌ சவால்கள்‌ மற்றும்‌ அழுத்தங்களை சிறப்பாக கையாள முடியும்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...