உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலையில் ஹோம பூஜையும், பால், தயிர் உட்பட பத்துக்கு மேற்பட்ட பொருட்கள் மூலம் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



இந்த பூஜையில், உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் மேற்கொண்டனர்.



இதேபோல உடுமலை குட்டை திடல் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.



மேலும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோவிலில் தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...