பிரதமரின் பிறந்தநாளில் கோவையில் பாஜக சார்பில் தாமரை திருமண விழா - மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

போத்தனூர்- செட்டிப்பாளையம் சாலையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.


கோவை: சிவனடியார்கள் தமிழகம் முழுவதும் இந்து தர்மத்தையும் சனாதன தர்மத்தையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



போத்தனூர்- செட்டிப்பாளையம் சாலையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாமரை திருமண திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த திருமண விழா கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டன. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தாலியை எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.



அதனைத் தொடர்ந்து விழாவில் அண்ணாமலை பேசினார். திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, இத்தனை நாட்களாக நீங்கள் யார் என்று தெரியாது. இன்றிலிருந்து நீங்கள் எங்கள் உறவுகள்.உங்களுக்கும் இந்த திருமண நிகழ்வின் மூலம் பல்வேறு சொந்தங்கள் கிடைக்க பெற்றுள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோலை வைக்கும் பொழுது இங்கிருந்து அழைத்துச் சென்ற சிவனடியார்கள் பதிகம் பாடிய நிலையில் பிரதமர் செங்கோலை வைத்தார். சிவனடியார்கள் அனைத்தையும் துறந்து பொதுநலத்திற்காக தொடர்ந்து சேவை செய்து வரக்கூடியவர்கள்., சனாதன தர்மமும் இந்து தர்மமும் நிலைத்திருக்கின்ற காரணம் சிவனடியார்கள் பங்காற்றியது.

சிவனடியார்கள் தமிழகம் முழுவதும் இந்து தர்மத்தையும் சனாதன தர்மத்தையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பிரதமரும் பொது நலத்திற்காக தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மகான்.

பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களை பாதுகாத்து எவ்வாறு இந்து தர்மத்தை மீட்டு கொடுத்திருக்கின்றார் என்பதை நாம் பார்க்கிறோம். வாரணாசியில் முகலாயர்கள் எந்த விதத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே வீடுகளை நெருக்கமாக கட்டியதாக காசி தமிழ் சங்கத்தின் பொழுது ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

தற்போதைய காலத்தில் சனாதன தர்மமும் இந்து தர்மமும் மிகவும் உறுதியாக உள்ளது. அதனை அழிக்க யாராலும் முடியாது. பிறகு வாரணாசியில் அந்த இடத்தை அவர்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றனர். மேலும் திருமணம் முடிந்து செல்லும் பொழுது திருமண தம்பதிகளுக்கு நாட்டு பசு மாடு ஒன்றும் வழங்கப்படுகிறது.

என்னுடைய சார்பிலும் ஒரு பசுமாடு வழங்கப்பட உள்ளது. உங்களுக்கு பிறக்கின்ற குழந்தை எவ்வாறு இந்த மண்ணில் நல்ல மனிதர்களாக வருகிறார்களோ அதேபோல பசு மாட்டின் கன்று குட்டிகளும் இந்து தர்மத்தை நம்முடைய சமயத்தை பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு பசு மாடுகள் உங்களிடம் இருக்க வேண்டும். மேலும் என்னுடைய திருமணமும் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல சிவனடியார்கள் நடத்தி வைத்தார்கள் என கூறி உரையை முடித்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஜூன் 5ம் தேதி யோகி ஆதித்யநாத் பிறந்த தேதியிலேயே பிறந்த ஒரு குழந்தைக்கு அவர்களது பெற்றோரின் விருப்பத்தின் பேரில் யோகி ஆதித்யநாத் என்ற பெயரை சூட்டி, இந்து தர்மத்தை பாதுகாக்க கூடிய ஏழை மக்களுக்கு அரணாக இருக்கக்கூடிய நாட்டிற்கு தலைவனாக வரவேண்டும் என வாழ்த்தினார். தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு "கோ-பசு" தானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர், எஸ்.ஆர்.சேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...