காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் - தாராபுரம் நகராட்சி தலைவர் வேண்டுகோள்

தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும். பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுக்களை பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும். கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...