உக்கடம் தெற்கு பகுதியில் தெருநாய்கள் தொல்லையால் அழிந்து வரும் கால்நடை விலங்குகள்

கோவை மாநகராட்சி 86வது வார்டு பகுதியான தெற்கு உக்கடம் பகுதியைச்சுற்றி உள்ள பொன்விழா நகர், அன்பு நகர், பிலால் நகர், அல் அமீன் காலனி, ரோஸ் கார்டன் மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம். அப்பகுதியில் திறந்தவெளி பகுதிகளில் இருக்கும் மீன் மார்கெட் மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில் இருந்து தெருநாய்கள் உணவு தேடி இங்கு வருவதே ஆகும். அதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் தெருநாய்களுக்கான மாநகராட்சி கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து தெருநாய்களை இங்கு கருத்தடைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை முடிந்து இப்பகுதியிலேயே விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அங்குள்ள கால்நடைகள் பாதிப்புக்குள்ளாவதாக புகார் வலுத்துள்ளது. இங்கு ஆடு, கோழி, மாடுகளை வியாபாரிகள் பட்டிகளில் வளர்த்து வருகின்றனர். தெருநாய்கள் அதிகரிப்பால் கால்நடைகள் கடிக்கப்பட்டு நாய்களால், கொல்லப்படுகின்றன. பொன்விழாநகரில் ஆரிஃப் எனும் ஆடு வளர்ப்போர் பட்டியில் தெருநாய்கள் புகுந்து கடித்ததில், 5 ஆடுகளை உயிரிழந்தன. தவிர 5 கோழிகளையும் இழுத்து சென்றுள்ளது. தொடர்ந்து, இப்பிரச்சனை நடந்து வருவதால், அப்பகுதியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



அப்பகுதி மக்கள் கூறுகையில்; தெருநாய்கள் பிரச்னையால் கால்நடைகள் வளர்ப்போருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து தெருநாய்கள் கருத்தடைக்கு கொண்டுவரப்பட்டு, தெருநாய்களை சிகிச்சிக்கு பிறகு இங்கு விடுவதே இந்த பிரச்னைக்கு காரணம். அதனால், இந்த பகுதியில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கிறது. இதுவரை, 20 க்கும் மேலான ஆடுகள், மாடுகள், 50க்கும் மேலான கோழிகள் நாய்கள் தொல்லையால் இறந்துள்ளது. இரவு நேரங்களில் மனிதர்கள் தனியாக வெளியில் வருவதற்கும் கூட மிகவும் அச்சப்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும்   இன்னும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.



இது குறித்து விலங்குகள் நலவாரிய உறுப்பினர் கல்பனா கூறுகையில்; ‘இங்கு கருத்தடைக்கு கொண்டு வரப்படும் தெருநாய்களை சிகிச்சை முடிந்து இப்பகுதியிலேயே விடுவதாக கூறப்படுவது மிகவும் தவறான குற்றச்சாட்டு. சட்டபடி தெருநாய்களை கொண்டு வரப்பட்ட இடத்திற்கே தான் மீண்டும் நாய்களை விடுகிறோம். கருத்தடை மையம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த, 3 ஆண்டில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாதம் குறைந்தது ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. ஒருநாய்க்கு கருத்தடை செய்வதற்கு ரூபாய் 700 முதல் 1000 வரை செலவாகும். இங்கு திறந்தவெளி பகுதியாக மீன்கடைகள், ஆட்டிறைச்சி கடைகள் இருப்பதால் தெருநாய்கள் உணவு தேடி இங்குவருவது இயல்பு. இன்னும் 8 மாதங்களில் கோவை மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் முற்றிலுமாக நிறைவடையும் நிலையுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை குறைந்துள்ளது. இப்பகுதியிலும் எங்கள் பணியினை விரைவில் முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி வெள்ளலுாரில் நாய்கள் கருத்தடை மையம் கட்டுவதற்கு இரண்டு ஏக்கரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் அங்கு எவ்வித வேலையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கருத்தடை மையம் ஆரம்பிக்கப்பட்டால் இடமாற்றம் செய்யப்படும்," என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...