வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா, வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கோவை: வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகம் வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பாக வனத்துறையினர் ஆழியார் சோதனை மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வால்பாறைக்கு செல்ல அனுமதிக்கபடும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பலகையால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்ததாக வால்பாறையில் உள்ள ஓட்டுனர் சங்கம், தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், சுற்றுலாவை நம்பி இருக்கும் அனைவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வனத்துறையால் வைக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.



இது தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆணைமலை புலிகள் காப்பக கல இயக்குனர் பார்க்கவ தேஜா முன்னிலையில் வால்பாறை உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கத்தில் சங்கத்தினர் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வனத்துறையினர் தெரிவிக்கையில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது ஆறு மணிக்கு மேல் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வரும்பொழுது மனித வன விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தனர்.



இதனால் 6 மணிக்கு மேல் வால்பாறை செல்வதை குறைக்க வேண்டும். வால்பாறையில் உள்ள பொது மக்கள் வன விலங்குகளை பார்த்தல் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாது என்றும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் செல்ல தடை செய்வதை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...