துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

துணை வேந்தர் நியமனத்தில் தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்துள்ள ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு முதல்முறையாக பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது நான்காவதாக பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினர் ஒருவரும் சேர்த்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் இந்த புதிய குழு உறுப்பினர் சேர்க்கையை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு ஆளுனர் தமிழக அரசுடனும் உயர்கல்விதுறை அமைச்சருடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அறிவித்துள்ளதாகவும், இது தமிழகத்தின் வரம்புகளுக்கு மாறாகவும் வரம்பு மீறிய செயல் போன்றது என தெரிவித்தனர்.



தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் ஆர் எஸ் எஸ் சிந்தனை உடையவராக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய மாணவர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...