சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை..!

கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்குவது சிறுவாணி நதி. கடந்த சில நாட்களாக சிறுவாணியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

தொடர்ந்து, அணையில் இருந்து நீர் உறிஞ்சும் வால்வுகளுக்கும் கீழே நீர்மட்டம் சென்றது. இதனால் கோவையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தொடர்ந்து அத்யாவசியப் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாததால் ஆங்காங்கே பொதுமக்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோவை மாநகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் லேசான மழை பெய்த்தது. இந்த கோடை மழை தொடரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்து மீண்டும் வெயிலின்  தாக்கம் அதிகரித்து வருகிறது.

கோவை, நீலகிரி, வால்பாறை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும், சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மாநகரில் கோடை மழை பெய்த போது, சிறுவாணி பகுதியிலும் மழை பெய்யும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தோம். ஆனால், சிறுவாணி ஆறு உற்பத்தியாகும் இடங்களிலோ, அல்லது நீர்பிடிப்பு பகுதிகளிலோ மழை பொழிவு இல்லை. அணையிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது'. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...