கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

கோவையில் பல்வேறு இடங்களில் தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: தொழில்நுட்ப பூங்காவை, சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாலாங்குளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம் சீரமைப்பு பணி, புட்டுவிக்கியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட துணை மின் நிலையம், பச்சாபாளையம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.



தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் கோவையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலாவதாக பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் பார்வையிட்டனர்.



பின்னர் சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாலாங்குளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம் சீரமைப்பு பணி, புட்டுவிக்கியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட துணை மின் நிலையம், பச்சாபாளையம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது குழு உறுப்பினர்கள் அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.பெ.கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...