கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாய்களுக்கான போட்டி..!! நாய்களின் சிகை அலங்காரத்தை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு..!

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் காவல்துறையை சார்ந்த 30 நாய்களும், பொதுமக்கள் சார்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட நாய்களும் பங்கேற்று தனித்திறனை வெளிக்காட்டின.



கோவை: நாய்களுக்கான போட்டியில் விதவிதமாக சிகை அலங்காரம் செய்து தங்களது செல்லப்பிராணிகளை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக உரிமையாளர்கள் ஆர்வமுடன் அழைத்து வந்திருந்தனர். இந்தப்போட்டியை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்பார்க்லிங் ஸ்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.



மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் பங்கேற்றன.



போட்டியில், காவல்துறையினரின் கட்டளைக்கு கீழ்படிதல், குற்றப்பிரிவு, வெடிமருந்து கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் கண்டறிதல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.



பொது மக்களுக்கான போட்டியில், 3 நிமிடத்தில் நாய்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டி நடைபெற்றது.



இதில் கோவை, ஊட்டி, ஈரோடு, மதுரை, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து 30 காவல்துறையை சேர்ந்த நாய்களும், 20க்கு மேற்பட்ட பொதுமக்களின் நாய்களும் கலந்து கொண்டது.



போட்டிகளை பார்ப்பதற்கு 100க்கு மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.



இதில் நாட்டு வகை நாய்களான சிப்பி, கன்னி வகை நாய்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்கள் சிலர் அவர்கள் வளர்த்து வரும் நாய்களுக்கு ஆடைகள் அணிந்து அழைத்து வந்திருந்தது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட நாய்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கபட்டன.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...