சீமான் உடல் நிலை பாதிப்பு! - பல்லடத்தில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து!

அனுப்பட்டியில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலைக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல்நிலை பாதிப்பின் காரணமாக, பல்லடத்தில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலையினால் விவசாயத்திற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக ஆலையை மூடக்கோரி 168 வது நாளாக அனுப்பட்டியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சீமானின் வருகைக்காக பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.



இதனிடையே சீமான் தாராபுரத்தில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு பல்லடம் வழியாக அனுப்பட்டிக்கு அருகே காரில் வந்துகொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக கூட்டத்தை ரத்து செய்துவிட்டு சீமான் திரும்பினார்.

இந்நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, சீமான் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்து கொண்டிருந்த போது உணவு சாப்பிட்டதில் திடீரென ஒவ்வாமை ஏற்பட்டது.

அதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். மேலும் மாலை திருப்பூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சீமான் கலந்து கொள்வாரா அல்லது மாட்டாரா என்பது மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனுப்பட்டியில் சீமான் கூட்டம் ரத்தான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



மேலும் வழி நெடுகிலும் கட்டப்பட்டிருந்த கட்சி கொடிகளை அவசர அவசரமாக கட்சி நிர்வாகிகள் கழற்றிச் சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...