சிற்றுண்டி திட்டத்தை வழங்க வேண்டும்…! - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்களை பனிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் தமிழக அரசை கேட்டுகொண்டனர்.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் "முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்களை பனிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த பத்தாம் வகுப்பு தேறிய சமையலர் உதவியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் 10 ஆண்டுகள் பணி முடிந்திருந்தால் அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும், இது பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்திய நிலையில் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்போது வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



அதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வழங்கினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...