பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் கேரள அரசு வேகமாக மேற்கொண்டு வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தேக்குவட்டை பகுதியில் கேரள அரசு மேற்கொண்டு வந்த தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இதைதொடர்ந்து தேக்குவட்டை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சக்கண்டி பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது. இந்த பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மீதமுள்ள பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டும் பணிகளை துவக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கேரள அரசின் தடுப்பணை கட்டுமான பணிகள் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுமென தெரிவித்தார். தமிழக அரசின் மெத்தனப்போக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வழக்கு நடத்தாத காரணத்தினால் தான் கேரள அரசு தடுப்பணை பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தடுப்பணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து நாளை க.க.சாவடி பகுதியில் கேரள எல்லையை ஒரு நாள் முழுவதும் மறிக்கும் முற்றுகை போராட்டம் 40 அமைப்புகள் சார்பில் நடைபெற இருப்பதை அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...