நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் விழா - நிர்வாகிகள் புகார்!

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான வழக்கில், அமைப்பின் செயல்பாடுகளுக்கும், அமைப்பின் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கொசினா சார்பில் நாளைய தினம் விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள விழாவை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2021ஆம் ஆண்டு கொசினா நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் செல்லாது என கோவை மாவட்ட பத்திர பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சங்கத்தின் பெயரை பயன்படுத்தி எந்த செயல்பாடும் செய்யக்கூடாது, விழாக்கள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சங்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கம் பெயரை பயன்படுத்தி சிலர் கோவையில் முப்பெரும் விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆர் எஸ் புரம் கலையரங்கத்தில் வரும் 16ம் தேதி விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சங்கம் தொடர்பான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தடையை மீறி சிலர் விழா நடத்த ஏற்பாடு செய்திருப்பது சங்க உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், விழா நடத்த அனுமதிக்க கூடாது என சங்க நிர்வாகத்தின் சார்பில் பத்திரப்பதிவு, கோவை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...