மாணவர்களுக்கு காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது வருத்தமளிக்கிறது -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்லூரி ஆண்டு விழா மற்றும் தமிழ்மன்றம் நிறைவு விழா" இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவிழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். 



அவர் பேசுகையில்; மாணவ- மாணவிகள் அமைதியாக இருந்தால் பல அர்த்தங்கள் உள்ளன. அமைதியான மாணவர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். கல்லூரி காலங்களில் மாணவர்கள் திறன்களை வளர்க்க வேண்டும். அதேபோன்றே இவர்களின் திறன்களை நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளையும், திறன்களையும் பல சாதனைகளை கௌரவம் செய்யும் விழாதான் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள். கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். 

அரசு வேலைகளில் மற்றும் அரசியலிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள் இன்று பல உயரிய பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு அரசியலில் காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது மிகவும் வருதமளிகிறது. தற்போதைய அரசியலில் உயர்ந்த முன்மாதிரிகள் யாரும் இல்லாததால் தவறான வழிக்கு இன்றைய இளைஞர்கள் கொண்டு செல்கின்றனர். நாம் என்ன படிக்கிறோம் என்பதை விட படிப்பினால் எவ்வளவு உயரத்தினை தொடுகிறோம் என்பதே முக்கியம். தோல்விகள், அவமானங்கள், துயரங்கள் மற்றும் கவலைகளை தோலில் சுமந்து கொண்டே இருக்காதீர்கள். இவைகளை தூக்கி எறியுங்கள் எப்பொழுதும் நிபந்தனை இல்லாத நட்பினை வளர்க்க வேண்டும் என்றார்.





இவ்விழாவில், தமிழ்மன்றத்தின் தூரிகை இதழ் சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. மேலும் இவ்வருடத்தின் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இதில், கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், துணை முதல்வர் விஜயசாமுண்டேஷ்வரி, தேர்வு கண்காணிப்பாளர் சுனிதா, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...