நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மாமன்ற உறுப்பினர்கள் நேரில் முறையீடு

கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வரும்நிலையில், நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும். இதனால் நுழைவாயில் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை சத்தி சாலையில் FCI கிடங்கிற்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் சத்தி சாலை பாரதி நகர் அருகே இந்திய உணவுக் கழகத்திற்கு சொந்தமான உணவு கிடங்கிற்கு செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரப்பாதை உள்ள நிலையில் பாதையை சீரமைக்கும் பணிகளை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது எனவும் அதன் ஒரு பகுதியாக சத்தி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் பாதையில் முடியும் இடத்தில் நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வாயில் கதவு அமைய உள்ளதாக அறிவதாகவும், அந்தப் பாதையை கோவை மாநகராட்சியின் 20, 26, 28வது வார்டு பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வரும் நிலையில் நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நுழைவாயில் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அப்பாதையை செப்பனிட்ட பிறகு கடந்த காலங்களை போலவே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் உரிய ஏற்பாடுகளை உணவுக் கழக நிர்வாகம் செய்திட மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த மனுவை 20வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 28 வது வார்டு கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...