கோவையில் பா.ஜ.க சார்பில் 'தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை' விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

கோவையில் பா.ஜ.க சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்று துவங்கியது.



கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இந்த பிரச்சார பயணமானது துவங்கியது. பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெறும் இந்த பிரச்சார பயணமானது இன்று துவங்கி வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்தும் நீர் நிலைகள் தூர்வாறுவதன் அவசியம் குறித்தும் இந்த பிரச்சார பயணத்தின் போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு பயணத்தின் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மரம் நடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த யாத்திரை துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். மாநில அரசு நீர் நிலைகளை தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தேவையான உதவிகளை பெற்றுத் தர தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதனைத் தொடந்து பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார பயணத்தின் போது நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், விழிப்புணர்வு பயணத்தின் போதே 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதலமைச்சரிடம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரச்சார பயணத்தின் போது ஆங்காங்கே மரங்களும் நடுவதுடன், குளம், குட்டைகளை தூர்வாறும் பணிகளிலும் ஈடுபட இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே வாகன அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜக-வினரின் வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...