இந்திய வுமன் நெட்வொர்க்குடன் இணைந்து சிஐஐ அமைப்பு 'தொழில் முனைவோர்களுடம் காபி' என்னும் நிகழ்ச்சியை நடத்தியது

சிஐஐ அமைப்பு இந்திய வுமன் நெட்வொர்க்குடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை 'தொழில் முனைவோர்களுடம் காபி' என்ற நிகழ்ச்சியாக கொண்டாடியது. 

கோவையைச் சேர்ந்த 8 பெண் தொழில்முனைவோர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களுடைய அனுபவங்களையும், பயணத்தையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 



45 டிகிரி ஃபிட்னஸ் நிறுவனத்தின் நிறுவனரும், ஆரோக்கிய பயிற்சியாளருமான நித்யாநந்தினி மனோகரன் மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞரும், பேக்கரோ உணவு விடுதியின் இயக்குநருமான பிரவீனா ஜே, ஸ்டெஃப் சிகை மற்றும் முக அழங்கார நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டேஃபி மற்றும் ஸ்னேக்ஸ்பஜார்.காம் நிறுவனத்தின் இயக்குநரான நிவேதிதா ஜெயராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் முதல் அமர்வில் "Breaking the glass ceiling for all right reason" என்னும் தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடுவராக சுவை புட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சுஜாதா கிருஷ்ணன் செயல்பட்டார்.

இதில் பங்குபெற்ற தொழில்முனைவோர்கள் அனைவரும் பெண்கள் தங்களுடைய இலக்குகளை அடைவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை எனக் கூறினார். ஆனால், பாலின வேறுபாடு காரணமாக பல இடையூறுகளை பெண்கள் தங்களுயை பாதையில் சந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறு வரும் இடையூறுகளை தைரியமாக சந்தித்து பெண்கள் தங்களது வாழ்வில் சாதனையடைய வேண்டும் என்று கூறினர்.

ஸ்டெஃப் சிகை மற்றும் முக அழங்கார நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டேஃபி பேசுகையில், என்னுடைய பெற்றோரை சம்மதிக்க வைப்பதே எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் அழங்காரப் பயிற்சிக்கு சென்று அதிலேயே எனது பணியை மேற்கொள்வது குறித்து எனது தந்தை மிகவும் அச்சப்பட்டார் என கூறினார்.



பெண் தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தொழில் மற்றும் குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

முதல் அமர்வின் நிறைவாக ஈவன்ட் மோசன் அமைப்பின் சுஜாதா கிருஷ்ணன், பெண்கள் தங்களது கணவுகளை தொடர பெற்றோரின் மனநிலையிலும், சமூக கண்னோட்டத்திலும் மாறுதல் ஏற்பட வேண்டும். 

இரண்டாம் அமர்வில் "Hardwork is more powerful than Havard" என்னும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்திற்கு ஜிஅர்ஜி மேலாண்மை கல்லூரியின் துணை பேராசிரியர் வந்தனா மாதவ்குமார் நடுவராக செயல்பட்டார்.

ஏரோ ஜும்பா பிட்னஸ் மற்றும் சிவானி டிசைனர்ஸ் நிறுவனர் சியாமா ரிதுவர்மன், மிஸ்டிக்யூ நிறுவனர் ஐஸ்வர்யா சுப்பிரமணியம், போட்ரைட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிகா சம்பத்குமார் மற்றும் சாஸ்தா ஆன்லைக் பொட்டிக் இயக்குநர் சுகன்யா சுப்பிரமணியம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் தொழில் துவங்குவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தங்களது சந்தேகங்களுக்கு விடை தெரிந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...