திரைப்படங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தவிர்த்தால் நல்லது - இயக்குனர்களுக்கு நடிகர் சந்தானம் வேண்டுகோள்!

திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது சிறப்பு எனக்கூறிய நடிகர் சந்தானம், மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன் என்றும் கூறினார்.



கோவை: திரைப்படங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்த்தால் நல்லது என நடிகர் சந்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக உருவாகியுள்ளது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும்

அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர உள்ளது. தற்போது கதாநாயகனாக நடித்து வருவதால், நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா தோசை வேண்டுமா என்பது போல இருக்கிறது.

நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன். தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன்.

சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது சிறப்பு என்றும் அறிவுறுத்தினார்.

காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், தான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்ததாகவும் இது தொடர்பாக நான் பதில் அளித்தால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள் எனவும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...