ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம்


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவர் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலிதாவின் மரணத்தில் மர்மம்  இருப்பதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமாதியின் அருகே செய்தியாளர்களைச் சந்தித்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சசிகலா அணியினரால் தான் தாக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அ தி மு க அணியானது சசிகலா தரப்பு மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.



இதனைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் ஓபிஎஸ் அணியினர், இன்று கோவை சிவானந்தா காலனியில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், 

முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், நடிகர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...