GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை!

கோவை பச்சாபாளையம் பகுதியில் பால்பண்ணையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பால் கொள்முதல் விலை உயர்த்த கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தற்போது அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என்றார்



கோவை: அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பால் பண்ணையை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது அங்குள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பராமரிப்பு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தார். மேலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டிங் செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில் அங்குள்ள பணியாளர்களிடமும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள், கருவூட்டுனர்கள், மற்றும் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதன்படி 124 பயனாளிகளுக்கு 2.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது,



ஆவின் ஒரு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இதன் மூலம் பலருக்கும் நன்மைகள் உள்ளது. இத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆவினை பொறுத்தவரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், காப்பீடு திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். யார் வேண்டுமென்றாலும் ஆவின் நிர்வாகிகள், அல்லது DR யை சந்தித்து பேசலாம், அவர்கள் உங்களுக்கு முறையாக வழிக்காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை இத்துறையின் அமைச்சராக நான் கூறி கொள்கிறேன்.

விவசாயிகள் தரும் பாலுக்கு விலையை கூட்டி தர வேண்டும் என கூறுவதில் நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. தற்போது அனைத்திற்கும் GST போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம்.

எங்கெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சொசைட்டி ஆரம்பிக்கும் பணிகளை செய்ய உள்ளோம். நாம் எடுத்துள்ள முயற்சிகளால் 6% மின் கட்டணம் குறைந்துள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து செல்கின்ற அரசை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று கூறுகிறார்.

ஒரு சாரார் மட்டும் பயனடைந்தார்கள் என்று இருக்க கூடாது என்பது தான் இந்த அரசின் கொள்கை. ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் இணைந்து இந்த பொதுத்துறையை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...