கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்ப்பு - 81 மனுக்கள் மீது விசாரணை!

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில், 81 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 2 மனுக்கள் மீது FIR, 3 மனுக்கள் மீது CSR பதிவு செய்யப்பட்டன. 76 மனுக்கள் சுமூக தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 81 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.



அதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டன.



3 மனுக்கள் மீது மனு ரசீது (CSR) பதிவு செய்யப்பட்டன. 76 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.



இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...