மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தீவிரம் - கோவை ஆட்சியர் தகவல்!

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும், கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை அரசிடம் தெரிவித்திருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.



கோவை: கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கான கோரிக்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரி புத்தூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இதில் 93 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,



விவசாயிகள் பிரச்சனைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. பட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால் பட்டு மானியத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர்களுக்கு செல்ல வேண்டும்.

ஒரே பயிரை விவசாய நிலங்களில் பயிரிடுவதன் மூலம் பூச்சி தொல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் நில மாசுபாடு ஆகியவை அதிகரித்து வருகிறது. இதனால் மாற்றுப் பயிரை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்.

மகளிர் திட்டம் மற்றும் மாற்றி யோசி திட்டத்தின் மூலம் ஏராளமான நலத்திட்டங்கள் மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகிறது. கிசான் திட்டன் மூலம் பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மகளிர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் வாங்குவதை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாய போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும்.

டெங்கு காய்ச்சல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது அதற்கான நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லோடு லாரிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிகமான வழக்குகள் இதனால் பதியப்பட்டு இருக்கிறது. விதிமீறல் இல்லாமல் இருக்கும் அளவிற்கு தொடர்ந்து அதிகாரிகள் அதனை பார்வையிட்டு வருகிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகைக்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக எங்கு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் தற்போது நடைபெற்று, பகுதி வாரியாக நடத்த தற்போது திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அதற்கான பயோமெட்ரிக் மிஷின்கள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...