முதல்வர் ஸ்டாலின் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!

முதல்வர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தை காட்டும் விதமாகவே அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.



கோவை: முதலமைச்சர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,



முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது.

தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர்.

ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அந்த விஷயத்தை விவாதிக்க நேரம் இருக்கிறது. அதே வேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்?.

செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகாராகும் விதமாக அந்த கடிதம் அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்ய கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்பொழுது ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக எம்பி, எம்.எல்.ஏ ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.

ஆளுநர் அப்படி படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கிறார்.

திமுக சொல்வதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது. இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்ன சொன்னார்கள்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது.

சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்கு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை என்று கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பதுதான் விவாதமே தவிர ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்.

ஆளுநருக்கு ஜி.யு.போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால் ஜி.யு.போப் குறித்து சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார்.

கலாச்சாரத்தை பற்றி பண்பாட்டை பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது. முதல்வர் எழுதிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தை காட்டும் விதமாகவே அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...