கோவை தி வெஸ்டன் காட்ஸ் சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம், எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள வெஸ்டன் காட்ஸ் சர்வதேச பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில், இந்திய விண்வெளிக் கழகத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியான பத்மஸ்ரீ ஒய்.எஸ்.ராஜன் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.



மேலும், கௌரவ விருந்தினராக இந்திய ராணுவத் துறையின் அதிகாரி கர்னல் சைலேந்தர் ஆர்யாவும், சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவின் மெக்கிரின் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஜாக்குலின் ஹைடன் மற்றும் சனோபியா ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் தலைமை வகித்தார். 9 ஆம் வகுப்பு மாணவி ரித்தன்யா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, பள்ளியின் ஆண்டு அறிக்கையை 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேர்ச்சி விழுக்காடு, இளம் விஞ்ஞானி, இளம் சாதனையாளன், நட்சத்திர மாணவர்கள், இளம் எழுத்தாளர்கள், பசுமைப் போராளிகளுக்கான விருதினை முதன்மை விருந்தினர் வழங்கினார். கல்வி ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கான "கலாம் மாணவ விருது" என்ற விருதினை சிறப்புத் தபால்தலை மூலம் மாணவ, மாணவியருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

மேலும், விளையாட்டுத் துறையின் சிறந்த வீரர்களுக்கான கோப்பையை எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷிகேஷ், ஆறாம் வகுப்பு மாணவர் ஆதிஷ் அகியோருக்கு வழங்கி, பள்ளியின் சிறந்தகுழு மாணவர்களுக்கான முதல் இடம் பிடித்த பிரமோஸ் அணிக்கு கோப்பையையும், இரண்டாம் இடம் பிடித்த பிரித்வி அணிக்கு கேடயத்தையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, கர்னல் சைலேந்தர் ஆர்யா மாணவ, மாணவியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். பின், இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம் என்ற தலைப்பில் முதன்மை விருந்தினர் தலைமையுரை ஆற்றி விழாவினைச் சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் 104 செயற்கைகோள் செலுத்தி உலக சாதனை படைத்த இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பள்ளியின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை சிறப்பு விருந்தினர் ஜாக்குலின் ஹைடன் வெளியிட இஸ்ரோவின் சார்பில் ஒய்.எஸ்.ராஜன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தலைமை விருந்தினர், அப்துல் கலாமுடன் இணைந்து எழுதிய இரண்டு நூல்களைப் பள்ளி நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, "இந்தியாவின் பெருமை" என்ற விருதினை பள்ளித் தாளாளர் சிறப்பு விருந்தினருக்கு, கௌரவ விருந்தினருக்கும் வழங்கினார். 



நிறைவாக அனைவரின் கண்களைக் கவரும் வகையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...