காடா துணி விற்பனை செய்யும் நிறுவனங்களில் ரூ.10 கோடி வரை நூதன மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது!

பல்லடம் அருகே காடா துணி விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்களில் நூதன முறையில் ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட மகுடீஸ்வரன் மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே காடா துணி விற்பனை நிறுவனங்களில் நூதன முறையில் ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதியானது காடா துணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பகுதியாகும். இப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் இருந்து பேல் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு காடா துணி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்ற நபர் இப்பகுதியில் ஹோல்சேல் வியாபாரத்திற்கு துணிகளை ஏற்றுமதிக்கு பல நிறுவனங்களில் வரவு, செலவு செய்து நம்பகத்தன்மை ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த நம்பிக்கையை பயன்படுத்தி 10 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதில் பாதிக்கப்பட்ட பலரும் பல்லடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, டெக்ஸ்டைல்ஸ் வியாபாரங்களை பொருத்தவரை காடா துணிகளை இடைத்தரகர்கள் மற்றும் நேரடி ஏற்றுமதியும் நடைபெறுவது வாடிக்கை.



இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பலரின் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் தான் வியாபாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனது தந்தையின் தொடர் செயலான இத்தொழிலை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறி முதலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் இரண்டு மாதம் வரவு செலவுகளை நன்றாக செய்து நம்ப வைத்துள்ளார்.

பிறகு வேன் மற்றும் லாரி ஆட்டோ போன்ற வாகனங்களில் காடா துணிகளை மீட்டர் கணக்கில் விலை பேசி பாதி பணம் கொடுத்து விட்டு, மீதி பணம் கொண்டு சென்ற பிறகு இரண்டு நாளில் கொடுப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும், லட்சக் கணக்கில் தனது தாய் மலர்கொடி மற்றும் மகுடீஸ்வரன் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட காசோலையை கொடுத்து ஒரே சமயத்தில் பல நிறுவனங்களை இதே பாணியில் ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆறு மாதமாகவே ஏமாற்றப்பட்ட பலரும் தங்களால் முடிந்த நடவடிக்கை மேற்கொண்டு தங்களுடைய பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் வழக்கு தொடர்ந்து அதற்கான பிடியானை பெற்று பல்லடம் காவல் நிலையத்தில் இன்று பல்லடம் போலீசார் தாய் மற்றும் மகுடீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர்.



இதனை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள் திடீரென அனைவரும் ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று ஒரே நாளில் இவர் மீது மோசடி புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

திடீரென நடைபெற்ற போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து பல்லடம் போலீசார் தாய் மகன் ஆகிய இருவரையும் கைது செய்து பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...