தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான ஆணழகன் மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி நடைபெற்றது.



இப்போட்டியில் பங்கேற்க சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை, சிவகாசி, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52, 60, 75 மற்றும் 90 மேல் ஆகிய எடை பிரிவில் 180 வீரர்கள் கலந்து கொண்டனர். அதேப்போல் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56, 66 மற்றும் 85 மேல் உள்ள எடை பிரிவில் 120 பேர் கலந்து கொண்டனர்.



பெஞ்ச் பிரஸ் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்வேந்தன் 100 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 60 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் 95 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.

75 கிலோ எடை பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த குமார் 135 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார். 90 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த தௌபிக் அகமது 137.5 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை பெற்றார்.



அதேபோல், மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் கோவையைச் சேர்ந்த புவனேஸ்வரன் முதல் பரிசை பெற்றார். இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்வேந்தன், மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாநில தி.மு.க இளைஞர் அணி தலைவர் பைந்தமிழ் பாரி பரிசுகளை வழங்கினார்.



Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...