வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி பசு மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில் செல்வி என்பவர் கால்நடை விலங்குகளான பசுமாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்.



இந்நிலையில், இவரது குடியிருப்பு பகுதியின் அருகாமையில் உள்ள புல்வெளிப் பகுதியில் இவர் வளர்த்துவந்த சுமார் 2 வயது மதிக்கத்தக்க பசுமாடு மேய்ந்துகொண்டிருந்த பொழுது அங்கு வந்த இரு சிறுத்தை புலிகள் பசுமாட்டின் கழுத்துப்பகுதியில் கடித்துக்குதறியது. இதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனைக்கண்ட செல்வியின் மகன் கூச்சல் எழுப்பியதில் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி அறுகாமையில் இருந்த புதர் பகுதிக்குள் ஓடியது.

இச்சம்பவம் குறித்து வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பசுமாட்டினை உடற்கூறு பரிசோதனை செய்து செல்வியின் வீட்டின் முன்புறப் பகுதியிலேயே புதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதியில் காட்டுச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதினால் அப்பகுதியில் காட்டுவிலங்குகள் வருவது தெரிவதில்லை. ஆகவே புதர்ச் செடிகளை அகற்றுமாறு எஸ்டேட் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

இதேப் போல் வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி எறுமைக் கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயம் ஏற்பட்டு அறுகாமையில் உள்ள கால்வாயில் விழுந்தது. நான்கு நாட்கள் கழித்து துர்ணாற்றம் வீசியதால் அறுகாமையில் உள்ள கடைக்காரர்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வந்து சுமார் 2 வயது மதிக்கத்தக்க எறுமை கன்றுக்குட்டியின் சடலத்தை அகற்றினர்.



வால்பாறை குடியிருப்பு பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை புலிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...