பள்ளிக் கூடம் 1.0 திட்டம் மூலம் 2,000க்கும் மேற்பட்ட குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன - கோவை மாவட்ட எஸ்.பி தகவல்!

கோவையில் பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் போதை பொருள்கள், பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் "பள்ளிக் கூடம் 2.0" ஜூலையில் தொடங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் "பள்ளிக் கூடம் 2.0" ஜூலையில் தொடங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 



புரோஜக்ட் பள்ளிக்கூடம் மூலம் கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட காவல்துறை சார்பில் 2,10,000 மாணவர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு வழங்கி பல குற்றங்களை தடுக்கப்பட்டு உள்ளது. 

பள்ளிக்கூடம் 2.0 தொடங்குகிறது. இந்த முறை வீடியோ, ஆடியோ முறைக்காக புரெஜ்டருடன் செல்ல உள்ளோம். தற்காப்பு கலை, போதைக்கு எதிரான விழிப்புணர்வு செய்ய உள்ளோம். இம்முறை பள்ளிக்கூடம் 1.0 இல் செய்யப்பட்டவற்றை புத்தகமாக வெளியிடப்பட உள்ளது

போதையில்லா கோவை என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்ய முடிவு செய்து ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. தற்காப்பு கலை தொடர்பான நிறுவனங்கள் உடன் இணைத்து வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது. 

கடந்த முறை 2025 வழக்குகள் பள்ளிக்கூடம் 1.0 மூலம் பதிவு செய்யப்பட்டன. புரோஜெக்ட் பள்ளிக் கூடம் கோவையில் மட்டுமே எடுத்து செய்து வருகிறோம். சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திட்டத்தின் போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே தடுக்கப்பட்டுள்ளன. 

தொழில்நுட்ப ரீதியிலான குற்றங்கள் குறித்து கேட்டபோது, தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் எனவே அது போன்ற குற்றங்களில் சிக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புரோஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் பழங்குடியினர் மாணவர்களுக்கும் சென்றடைய நிச்சயம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...