உடுமலை திருப்பதி கோவில் 5ஆம் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆஞ்சநேயர், கருடாழ்வார் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை பாலாஜி பட்டர் தலைமையில் நடைபெற்றது.



திருவள்ளூர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்துவான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் எஸ்.வி.புரம் ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 



உற்சவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், நலுங்கு பொடி, விபூதி, பழங்கள் உட்பட பதினாறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.



இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி கோவில் அறங்காவலர் குழு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...