உலக யோகா தின விழா - யோகாசனம் செய்து அசத்திய மாணவ, மாணவிகள்!

உலக யோகா தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பயனீர் மேல்நிலை பள்ளியில் நடந்து வரும் தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் யோகா ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



கோவை: செல்வபுரம் அடுத்த கட்டாஞ்சி மலை பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் மாணவர்கள் உலக யோகா தினத்தையொட்டி யோகாசனங்கள் செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள பயனீயர் மேல்நிலை பள்ளியில் என்.சி.சி மாணவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், சர்வஜன மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லூரி உள்ளிட்ட 13 கல்வி நிறுவனங்களில் உள்ள என்சிசி மாணவ மாணவர்கள் பங்கற்றுள்ளனர். 

இந்நிலையில் புதன்கிழமை உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவை பயனீர் கல்வி நிலையங்களின் செயலர் அபர்ணா ராஜ்குமார் தொடங்கி வைத்தார். 

இதற்கு பயனீர் கல்வி நிலையங்களின் நிர்வாக அதிகாரி பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில் ஏறத்தாழ 450க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் மைதானத்தில் வரிசையாக அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர். 

பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரம் அருகே உள்ள கட்டாஞ்சி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்து முகாமின் கமாண்டிங் அதிகாரி மேஜர் பி. அசோக்குமார் விளக்கினார்.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த துறவிகளால் தோற்றுவிக்கப்பட்ட யோகாவின் அத்தியாவசிய தேவை, முக்கியத்துவம், இன்றைய இளைய சமுதாயத்தினர் இதை பின்பற்ற வேண்டியதன் நோக்கம் குறித்து உதவி கமெண்டிங் அதிகாரி விஜயகுமார் ரெட்டி விளக்கினார்.



பின்னர் பத்துக்கும் மேற்பட்ட யோகாசனங்களை மலை முகடுகளில் பாறைகளில் அமர்ந்து தேசிய மாணவர் படையினர் செய்து காண்பித்தது அந்த மலைப் பாதையில் வந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த என்சிசி அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பயணியர் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி அலுவலர் ராஜ்மோகன் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...