கோவையில் 5 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை மீண்டும் திறக்க வேண்டும் - பாமக மனு!

கோவை ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் கிராமத்தில் 5 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட ஆலாந்துறை அருகே 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தை திறக்க வலியுறுத்தி பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட முகாசிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அதிக அளவில் உள்ளனர்.



இந்த கிராமத்தில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிப்பிடம் ஐந்து ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் கழிப்பிட வசதியின்றி முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகுந்த அச்சத்துடன் உயிருக்கு பயந்து இயற்கை உபாதைகளை கழிக்க சென்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.



எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு பொதுக் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை மாவட்ட பாமக சார்பில் கோவை மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...