செந்தில்பாலாஜி மீது இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கான காரணம் என்ன? - கொங்கு ஈஸ்வரன் கேள்வி!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு ஈஸ்வரன், கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்ட பின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக முழுமையாக வெற்றியை பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு குறிவைத்து பாஜக காய் நகர்த்துகிறதா என ஐயம் எழுவதாகவும் தெரிவித்தார்.



கோவை: செந்தில்பாலாஜி மீது இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கான காரணம் என்ன? என கொங்குநாடு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொங்குநாடு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கொங்கு ஈஸ்வரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 



கடந்த ஓராண்டு காலமாகவே பாஜக அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள். 

பணிகளை செய்வதிலோ, கட்சியை வளர்த்துவதிலோ, பூத் கமிட்டி அமைப்பதிலோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எதிர்கட்சிகளை அங்கு ஆளுங்கட்சியாக உள்ளவர்களை குறிவைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலே கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியிலே தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். 

மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலங்கானா என பல மாநிலங்களில் பாஜகவின் இந்த செயல்பாடுகள், அடுத்தாண்டு தேர்தலை நோக்கி செயல்படுவதை பார்க்க முடிகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் வழக்குகள், கைதுகள் என நடந்துள்ளது. தற்போது தமிழகத்திலும் அவ்வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள். 

எட்டு ஆண்டுகளுக்கு முன்னாள் போடப்பட்ட வழக்கு திடீரென வேகமெடுத்து இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஒரே நாளில் தீவிரத்தை காட்டி தமிழகத்தில் உள்ள ஆளும்கட்சியை குறிவைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். 

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், முறைப்படி அதனை செய்யும் பொழுது யாரும் அதனை எதிர்க்க போவதில்லை, அதனை மீறும் போது தான் அனைவரும் வருத்தப்படுகின்றோம். 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிப்பதிலோ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலோ எந்த மாறுபட்ட கருத்தும் இருக்காது. ஆனால் நடத்தப்பட்ட முறைகள் அனைவரும் விரும்பத்தக்கதாக இல்லை. இதுபோன்ற விசாரணை நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தவிர்க்கலாம்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை உணர முடிகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தயாராவதற்கான அவசியம் உள்ளது. இப்படிப்பட்ட நடைமுறைகள் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். 

அப்படிப்பட்ட நிலைமையும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படும். யார் மீது வேண்டுமானாலும் வழக்கு இருக்கலாம், பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அப்படிப்பட்ட விசாரணைகளை சரியான முறையில் நடத்த வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கையால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் என்னைப் போன்றவர்களின் வருத்தமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இவ்வளவு தீவிரமாக ஆக இருப்பதற்கான காரணம், கொங்கு மண்டலத்தில் அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட பின்னால் இந்த பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. 

அதற்கு அவர் தான் காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே அதனை நோக்கமாகக் கொண்டு பாஜக கொங்கு மண்டலத்தை குறி வைத்து இப்படிப்பட்ட விஷயங்களில் காய் நகர்த்துகிறார்களா? என்ற ஐயமும் யாருக்கும் வராமல் இல்லை. 

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...