ஜூலை 6-ல் கோவையில் 59வது வெப்பமண்டல உயிரியல், பாதுகாப்பு சங்க சந்திப்பு!

59 வது வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு கோவை குமரகுரு கல்லூரியில் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கோவை: கோவை குமரகுரு கல்லூரியில் 59 வது வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் நிலப்பரப்பு, கடல் மற்றும் கடலோர நிலப்பரப்புகளில் உள்ள சிக்கல்களை கண்டறிதல். காடுகள், விவசாயம், காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார அணுகுமுறைகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இச்சங்கத்தின் 59 வது வருடாந்திர சந்திப்பு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வருகிற ஜூலை 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை இயற்கை சூழலிகளுக்கான இந்திய பிராந்திய சங்கம், குமரகுரு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய வனவிலங்கு நிறுவனம், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஓசை பாதுகாப்பு மற்றும் ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோரும் இணைந்து ஒருங்கிணைக்க உள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது, இதில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் கூறியதாவது,

வெப்ப மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு இந்தியாவில் இரண்டாவது முறையாக, "அறிவியலின் சமநிலை தன்மை, பாதுகாப்பு மற்றும் சமூகம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தொழில் வல்லுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அந்நிகழ்வில் இயற்கை சார்ந்த செயல்களுக்கு முன்னுரிமை வழங்குதல், நீலகிரி உயிர்க்கோள காப்பக சுற்றுப்புறம், வெப்ப மண்டல சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியமான இடங்கள் மற்றும் உலகளாவிய காலநிலை தன்மை பராமரிப்பு பற்றிய கருத்தரங்கம் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.

இது போன்ற பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் கொள்கை உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நிகழ்வுகள் ஆகியவை தற்காலிக நிகழ்வுகளுக்கும் எதிர்கால தீர்வுகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...