கோவை ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவையில் நடைபெற்ற ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை கூட்டத்தில், கோவையை தனிக்கோட்டமாக உடனடியாக உயர்த்தி, போத்தனூரில் தலைமையகம் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை: கோவை ரயில்வே உபயோகிப்பாளர் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை ரயில்வே உபயோகிப்பாளர் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்/கோரிக்கைகளை ஒருமனதாக நிறைவேற்றி ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

1. *தனி கோட்டம்*

வளர்ச்சி மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, மதுரை, திருச்சி போல கோயம்புத்தூரை தனிக்கோட்டமாக உடனடியாக உயர்த்தி, போத்தனூரில் தலைமையகம் இயங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கிலேயர் காலத்திலேயே போத்தனூர் தென்னிந்திய ரயில்வேயின் தலைமையிடமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. *மறுசீரமைப்பு*

கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி வரை ரயில்வே பிரிவு தற்போது இருக்கும் பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்திற்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

3. *தொடர்வண்டி நிலையம்* 

கோயம்புத்தூர் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் ரூபாய் 1,000 கோடி செலவில் ஏர்போர்ட் போன்ற சகல வசதிகளும் பெற்ற ரயில் நிலையம் மாற்றப்பட வேண்டும்.

4. பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர் ரயில்வே ஸ்டேஷன்கள் கூடுதல் தளங்கள், சிறந்த சாலை வசதிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

5. பெரிய நகரங்களுக்குள் உள்ள ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு ரயில்வேயில் உள்ள நடைமுறைப்படி, இருகூர் ரயில் நிலையத்தை கோவை கிழக்கு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், போத்தனூரை கோயம்புத்தூர் தெற்கு என பெயர் மாற்ற வேண்டும்.

6. வளர்ந்து வரும் கோவையை கருத்தில் கொண்டு புதிதாக டைடல் பார்க், ஏர்போர்ட், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம் சிட்கோ நிறுத்தம ரயில் நிலையங்கள் ( Halt Station) உருவாக்கப்பட வேண்டும்.

7. மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தெற்கு (போத்தனூர்) Terminal Station ( முனையமாக ) மாற்றப்பட வேண்டும். இவற்றுக்கு தேவையான இட வசதி ரயில்வே நிறுவாகத்திடம் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

8. கோவைக்கும், மேட்டுப்பாளையத்திற்கும் இடையேயான பெரியநாயக்கன்பாளையத்தை கடக்கும் நிலையமாக ( Crossing Station ) மாற்றப்பட வேண்டும்.

9. செட்டிபாளையம், உருமாண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்கள் உடனடியாக மறுத்திறப்பு ( Reopen ) செய்துதரப்படவேண்டும்.

10. *ரயில் சேவை*

கோவையில் இருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை, செங்கோட்டை, திண்டுக்கல் போன்ற ரயில் வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

11. கோவையில் இருந்து பயணிகள் அதிகம் உபயோகப்படுத்தும் கோவை -பெங்களூரு இரவு நேர ரயில், கோவை - எக்மோர் சென்னை ( via தாம்பரம் ), கோவை - காரைக்கால்/ நாகப்பட்டினம் ( டெல்டா மாவட்டங்களுக்கு ) கோயம்புத்தூர் முதல் திருவனந்தபுரம் (எர்ணாகுளம் வழியாக) உடனடியாக புதிய தினசரி ரயில் அறிமுகப்படுத்த வேண்டும்.

12. திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் போன்றவை கோவை வழியாக வழி மாற்றம் ( Rerouting ) செய்யப்பட வேண்டும்.

13. கோவை - மேட்டுப்பாளையம் MEMU கோவை தெற்கு (போத்தனூர்) வரை குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு மூன்று முறை நீடிக்கப்பட வேண்டும்.

14. கோவை வட்ட ரயில் சாலை ( Circular Train ) கோவை, கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், கோவை கிழக்கு (இருகூர்), கோவை தெற்கு (போத்தனூர) வழி செயல்பட ஆவன செய்யவேண்டும்‌‌.

15. எர்ணாகுளம்- SMVT பெங்களூர் ரயில், கொச்சுவேலி- ஹூப்ளி ரயில், டாடாநகர் டூ எர்ணாகுளம் ரயில், கோவை வழியாக திருப்பி விட வேண்டும்.

16. *ரயில்கள் நிறுத்தம்* கீழ்கண்ட ரயில்கள் கோவை தெற்கு (போத்தனூர்) ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும்.

*கோவை - மங்களூர் 

*எர்ணாகுளம் - பெங்களூர்

*எர்ணாகுளம் - காரைக்கால்.

17. கீழ்க்கண்ட ரயில்கள் வடகோயில் நின்று செல்ல வேண்டும்‌.

கோவை எக்ஸ்பிரஸ் கோவையில் முடியும் ரயில்கள் அனைத்தும். பீளமேடு ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.

கோவை கிழக்கு (இருகூர்) ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.

18. *ரயில்வே உள்கட்டமைப்பு*

பணிமனை விரிவாக்கம் மற்றும் பிட் லைன் (Pit Line ) மற்றும் ஸ்டேப்ளிங் லைன் ( Stabling Line ) போன்ற வசதிகள் கோவை தெற்கு ( போத்தனூர்) கோவை கிழக்கு (இருகூர்), மற்றும் நல்லாம்பாளையத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

19. ரயில் இயக்கத்தில் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்களைப் பெறவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' முறையை ரயில்வே ஏற்றுக்கொண்டது. கோயம்புத்தூர் கோட்டத்தில் முழு தானியங்கி பிளாக் சிக்னலிங் (ஏபிஎஸ்) பிரிவு செயல்படுத்தப்பட வேண்டும், இது அதிக ரயில் சேவைகளை இயக்குவதற்கான வரி திறனை அதிகரிக்கும்.

20. கோயம்புத்தூர் முதல் ஜோலார்பேட்டை வரை மணிக்கு 130 கிமீ வேகத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இது ரயில் இயக்கங்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதில் 52 கிலோ எடையுள்ள தண்டவாளங்களை 60 கிலோ ஒன்றுடன் முழுமையாக மாற்றுவது உட்பட; பாலங்களை வலுப்படுத்துதல்; வளைவுகளை அகற்றுதல்; பாதைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தடுப்பு சுவர்கள்; தானியங்கி சிக்னலிங்/இரட்டை தூர சமிக்ஞையை வழங்குவதன் மூலம் சமிக்ஞையை மேம்படுத்துதல் மற்றும் மேல்நிலை வரி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

21. கோயம்புத்தூர் கிழக்கு (இருகூர்) ரயில்வே சந்திப்பு, உலோகங்கள், உணவு மற்றும் சிமென்ட் வேகன்களை எளிதாக்கும் சரக்கு போக்குவரத்து மையமாக உருவாக்கப்பட வேண்டும்.

22. ஜோலார்பேட்டை - கோயம்புத்தூர் 282 கிலோமீட்டர் (3வது மற்றும் 4வது ரயில் பாதைகள்), கோயம்புத்தூர் - ஷோரனூர் (3வது மற்றும் 4வது ரயில் பாதைகள்) இறுதிக் கணக்கெடுப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த ரயில்வே வாரியத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.

23. வாளையார் - காஞ்சிக்கோடு ரயில் பாதையில் காட்டு யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க ஒரே நிரந்தரத் தீர்வு, முழு நீளத்திற்கும் உயர்த்தப்பட்ட ரயில் பாதையாகும், இப்போது 48.26 கிமீ மற்றும் 52.56 கிமீ நீளத்திற்கு இரண்டு மின் பாதைகள் உள்ளன. காடு வழியாக செல்லும் 24 kms தண்டவாளத்தை அகற்றி, காட்டின் வெளிப்புறத்தில் உள்ள 16 kms ரயில் பாதையுடன் சேர்த்து உயர்த்தப்பட்ட இரட்டை ரயில் பாதையை அமைக்கவும்.

24. உணவுத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...