195 நாடுகளின் பெயர்களை உச்சரித்து 6 வயது சிறுவன் சாதனை!

கோவை உருமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த லோகித் என்ற 6 வயது சிறுவன் 195 உலக நாடுகளின் பெயர்களை எழுத்துக்களுடன் (Spelling) உச்சரித்த நிலையில், இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கியது.


கோவை: 195 உலக நாடுகளின் பெயர்களை எழுத்துக்களுடன் (spelling) வேகமாக உச்சரித்து கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை உருமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித்(6). ஒன்றாம் வகுப்பு பயிலும் லோகித், பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே படிப்பில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார்.

வழக்கமாக ஆங்கிலத்தில் தடுமாறும் குழந்தைகள் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவன் லோகித்  வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக அசாத்தியமாக ஒப்பித்து அசத்தி காட்டியுள்ளார்.



இதனை கவனித்த பெற்றோர்கள் சிறுவனுக்கு பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்றுத்தர தொடங்கியுள்ளனர். குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள், அதற்கான ஆங்கில எழுத்துகளையும் (spelling) சொல்லிக் கொடுத்துள்ளனர்.



இதனையடுத்து உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை (spelling)உச்சரித்து அசத்தி காட்டினார். சிறுவனின் இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது.

தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...