கோவை அருகே பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த பெண் பலியான சோகம்!

கோவை மலுமிச்சம்பட்டி அருகே தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சகாயமேரி என்பவர் கட்டுவிரியன் பாம்பு கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே பாம்பு கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் சகாயமேரி (58). இவர் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் மகன் அலெக்சாண்டர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சகாயமேரியை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சகாயமேரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....