கோவை வேளாண் பல்கலையில் உலக சுற்றுச்சூழல்‌ தினம் கொண்டாட்டம்!‌

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல்‌ தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நெகிழி பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தும் மனித சங்கிலி, கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மனித சங்கிலி, கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறை சார்பில் கடந்த ஜூன்‌ 5 ஆம்‌ தேதி உலக சுற்றுச்சூழல்‌ தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில்‌ நெகிழி மாசுபாடு குறைப்பு மற்றும்‌ விழிப்புணர்வு பற்றிய பல்‌வேறு அங்கங்களாக, மலபார்‌ கோல்டு & டைமண்டு மற்றும்‌ ஐ.டி.சி ஆகிய குழுமங்களுடன்‌ இணைந்து பல்வேறு நிகழ்வுகள்‌ மற்றும்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டன.



அவற்றுள்‌ ஒரு நிகழ்வாக வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின்‌ மனித சங்கிலி, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ தமிழ்வேந்தன்‌, சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ மகேஸ்வரி மற்றும்‌ பயிர்‌ மேலாண்மை இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ கலாராணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில்‌ வேளாண்‌ பலகலைக்கழகத்தின்‌ நிர்வாக இயக்குநர்கள்‌, முதன்மையர்கள்‌ மற்றும்‌ சுமார்‌ 300க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ கலந்து கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்பாக நெகிழி மாசுபாடு மறறும்‌ பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்‌.

அதைத்‌ தொடர்ந்து பொதுமக்களுக்கு பழ மரக்கன்றுகளை வழங்கும்‌ நிகழ்வும்‌ நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள பொன்விழா அரங்கில்‌ நெகிழி மாசுபாடு குறித்த கலை நிகழ்ச்சிகள்‌, கருத்தரங்கம்‌ மற்றும்‌ பட்டிமன்றம்‌ ஆகியவை நடைபெற்றன.

காற்று, மண்‌, நீர்‌ மற்றும்‌ உயிரினங்கள்‌ ஆகியவற்றிற்கு நெகிழியினால்‌ ஏற்படும்‌ தீங்குகளை மாணவர்கள்‌ தங்களின்‌ சிந்தனை துகள்களை கருத்தரங்கத்தின்‌ வாயிலாக விளக்கினர்‌.

அதன்‌ பிறகு சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறை, முதுகலை மாணவர்களின்‌ நெகிழி பயன்பாடு மனித குலத்தை விண்ணை தொட வைக்குமா? அல்லது மண்ணில்‌ புதைய வைக்குமா? என்ற தலைப்பில்‌ நெகிழி பயனபாடு, மாசுபாடு, விழிப்புணர்வு மற்றும்‌ நெகிழியின்‌ பல்வவறு தன்மைகள்‌, ஊடுருவும்‌ முறை ஆகியவற்றை பற்றி காரசாரமான பட்டிமன்றம்‌ நடைபெற்றது.

இந்த பட்டிமன்றத்தின்‌ நிறைவாக மாணவர்‌ நல மையத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ மரகதம்‌, நெகிழி மாசுபாடு பற்றியும்‌ அவற்றை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்‌ மற்றும்‌ இன்றியமையாமை குறித்தும்‌ விளக்கினார்‌.

அவற்றைத்‌ தொடர்ந்து உலக சுற்றுச்சூழல்‌ தின நிகழ்வாக கருத்தரங்கில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ இரா.தமிழ்வேந்தன்‌ அவர்கள, முனைவர்‌ எஸ்‌.டி. சிவக்குமார்‌ முனைவர்‌ மு.மகேஸ்வரி, மற்றும்‌ முனைவர்‌ தேவகி ஆகியோர்‌ முன்னிலையில்‌ நெகிழி மாசுபாடு குறித்த சிறந்த புகைப்படபோட்டி, கவிதைப்‌ போட்டி, குறும்பட தொகுப்பு, நெகிழி கைவினை பொருட்கள்‌ மற்றும்‌ பல்வேறு போட்டிகள்‌ நடைபெற்றது. 

இப்போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலையின்‌ பதிவாளர்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினார்‌. இந்த நிகழ்வுகளின்‌ தொடர்ச்சியாக இணையவழி கருத்துரை “நெகிழிகள்‌ உலகின்‌ அடுத்த நெருக்கடி” என்ற தலைப்பில்‌ முதன்மையர்‌ முனைவர்‌ முகமது ரியாஸ் உட் (UNDP Accelerator lab, Figi) வெகுசிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...