கோவையில் யூடியூப் சேனல் மூலம் முதலீடு செய்யக் கோரி மோசடி - தம்பதி உட்பட மூவர் கைது!

ரூ.1,200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1,500 என யூடியூப் சேனலில் முதலீடு செய்ய வலியுறுத்தி சுமார் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த கோவையை சேர்ந்த ரமேஷ் - ஹேமலதா தம்பதி உட்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: யூடியூப் சேனல் மூலம் முதலீடு செய்யக்கோரி சுமார் ஒன்றரை கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. 

இவர்களது சேனலில் தென்காசியை சேர்ந்த அருணாச்சலம் (34) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தம்பதியினர் தங்களது யூடியூப் சேனலில் ரூ.1,200 முதலீடு செய்தால், 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,500 ஆக திருப்பி தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த அறிவிப்பை நம்பிய பலர் இவர்கள் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வில்லை. இதனிடையே தம்பதியினர் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் இந்த சேனலில் முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா(30) கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் ரேணுகா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தம்பதியினர் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. 

இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமலதா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் (வீடியோகிராபர்) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது, கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.



கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250 ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...