அரசு பேருந்தில் பேராசிரியையிடம் தங்க நாணயத்தை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை குனியமுத்தூர் வழியாக செல்லும் அரசு பேருந்தில் பயணித்த தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத பெண் பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சுகுணாபுரம் அருகே அரசு பேருந்தில் தனியார் கல்லூரி பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (57). இவர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டவுன்ஹால் சென்ற தமிழ்ச்செல்வி ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை செல்ல அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது சுகுணாபுரம் மைல் கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது கைப்பை பேருந்தில் விழுந்ததாக தெரிகிறது. 

அப்போது அந்தப் பையில் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை வைத்திருந்த மஞ்சள் பை மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அருகில் அமர்ந்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மாயமானது தெரியவந்தது. 

இதையடுத்து, தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்க நாணயத்துடன் தப்பிச்சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பேராசிரியையிடம் இருந்து தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...