'ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர் குந்தன் சந்திராவத்தை உடனடியாக கைது செய்யவேண்டும்' இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட நிர்வாகக்குழுக்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.  கோவை ஜீவா இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட நிர்வாகக்குழுக்க கூட்டம் தேவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் அவர்கள்  கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது:

கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய் வழங்கப் படவில்லை. சில கடைகளில் அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கப் படுகிறது. தமிழக அரசின் இத்தகைய போக்கு படிப்படியாக ரேஷன் விநியோக முறையை ரத்து செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும். எனவே, இதற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருந்து போராடவேண்டும்.

கேரள  மாநில முதல்வர்  பினராய் விஜையன் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் தரப்படும் என்று ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர் குந்தன் சந்தராவத் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.மத்தியில் பி.ஜெ.பி. ஆளுகிற தைரியத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர் ஒருமாநிலத்தின் முதல்வர் தலையையே வெட்டிக் கொண்டுவர பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார். இந்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக குந்தன் சந்திராவத்தை கைது செய்யவேண்டும்.

ஈஷா யோகா மையம் 109 ஏக்கரில் அரசு அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும்  கட்டடங்களைக் கட்டி  உள்ளது என்று தமிழக அரசு நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.ஈஷா மையம் அபிவிருத்தி கட்டணம் எதைதையும் காட்டவில்லை என்றும் கூறி உள்ளது.ஈஷா மையம் அபிவிருத்தி கட்டணத்தை கட்டிவிட்டால் அதை அங்கீகரித்து விடுவது என்ற தொணியில் உள்ளது.வனப் பகுதிக்குள் யானை வழித் தடங்களை ஆக்கிரமித்தும், மலைவால் மக்களுடை ய நிலங்களை ஆக்கிரமித்தும் அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி இன்றி ஈஷாவால் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தையும் இடிக்கவேண்டும் ஈஷா ஆக்கிரமித்துள்ள நிலங்கள் அனைத்தையும் அரசு கையாகப் படுத்தவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...