சின்னதடாகம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்!

கோவை சின்னதடாகம் அருகே டெய்லர் கடை நடத்தி வந்த நபர், தன்னுடன் பழகி வந்த சித்ரா என்ற பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று, திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



கோவை: கோவை சின்னதடாகம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற நபர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா (35). இவர் கோவை அடுத்த வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் (39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக, கோவை சின்னத்தடாகம் மாரியம்மன் கோவில் வீதியில் வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களாக அவர்களது வீடு பூட்டியிருந்துள்ளது. 

இந்நிலையில் மதுரைவீரன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சித்ராவை கொலை செய்ததாக சரணடைந்துள்ளார். இதையடுத்து திண்டுக்கல் போலீஸார் கோவை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 

தடாகம் போலீஸார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சித்ரா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சித்ராவின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து, மதுரைவீரனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்ரா கடந்த 4 மாதங்களாக தன்னுடன் வசித்து வருவதாகவும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். 

இதனால், கடந்த 29 ஆம் தேதி இருவரும் குடிபோதையில் வீட்டில் இருந்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் சித்ராவை மதுரைவீரன் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சரணடைந்த மதுரைவீரன் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...