ஆர்க் அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.புரம் காதுகேளாதோர் மாநகராட்சி பள்ளியில் டாக்டர். கலாம் நூலகம் திறப்பு

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆர்க் அறக்கட்டளை கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளியில் டாக்டர். கலாம் நூலகத்தை நிறுவியது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



2015 ஆண்டு துவங்கப்பட்ட கலாம் நூலகம் திட்டம் நூறு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நூலகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதுவே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐந்து மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். 

இதற்காக ஆர்க் அறக்கட்டளை தரப்பில் புத்தகங்களை சேகரிக்க ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளுக்கான பல்வேறு தகவல்கள்களை உள்ளடக்கிய புத்தகங்கள் ஆர்க் அறக்கட்டளையின் ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்டது.

இன்று இரண்டாம் கட்டமாக கோவையின் பல்வேறு மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 11 நூலகங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 



முதல் நூலகத்தை இன்று கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். இதன் துவக்க விழாவில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, சமூக ஆர்வலர் அஞ்சலி அஜித், மிர்சஸ் எர்த் இந்தியா ஜெயா மகேஷ் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



இந்த நூலகம் குழந்தைகளை கவரும் வகையில் பலவண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு வகை தகவல் புத்தகங்கள், கதை புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் மற்றும் வரலாறு தொடர்பான புத்தகங்கள், புவியியல் புத்தகங்கள் உள்ளிட்ட பல இடம்பெற்றுள்ளன.



இத்திறப்பு விழாவிற்குப் பின் காதுகேளாதோர் மாணவர்களுடன் உரையாற்றிய மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாணவர்கள் புத்கங்களை வாசிக்க பழகிக்கொள்ள வேண்டும் என்றும், இந்த நூலகத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். மேலும், வண்ணப்புகைப்படத்துடன் கூடிய புத்தகங்களை வழங்குவதாக குழந்தைகளிடம் உறுதியளித்தார்.



மேலும் அவர், வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், பள்ளி படிப்பில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என்றும் மாணவர்களிடையே கூறினார். குழந்தைகள் சிறுவயது முதலே அறிவியல் தொடர்பான புத்தகங்களை படித்தால் தங்களுடைய அறிவியல் சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு அது உதவும் என்று தெரிவித்தார்.

சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நாம் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை குறித்து தெரிந்துவைத்திருக்க வேண்டும் எனவும், மேலும், புத்தகங்களை எப்படி சேர்ப்பது என்பது குறித்த திட்டங்களை உருவாக்கி நூலகத்தை முடிந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என க.விஜயகார்த்திகேயன் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, அப்பள்ளியின் குழந்தைகள் பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள் மற்றும் வாகனங்களை ஓட்டும்போது கைபேசி உபயோகிப்பதன் தீமைகள் குறித்து மௌன நாடகத்தினை நடத்திக் காட்டினர். தொடர்ந்து, சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றையும் மாணவர்கள் நிகழ்த்திக் காட்டினர். இது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...