ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் என புதிய தமிழகம் கிருஷ்ணாசாமி பேட்டி

விவசாயத்துக்கு மட்டும் நிலம் கிடையாது எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்க பைப் நடுவதன் மூலம் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஏற்று கொள்கிறது என கூறினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய்கள் நடுவதன் மூலமாக புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும், அப்படி வந்தால் பெட்ரோல், டீசல் எடுக்கும் அரேபிய நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் செத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையே சரியல்ல என கூறிய அவர், விவசாயத்துக்கானது மட்டும் நிலம் கிடையாது எனவும், இந்தியாவில் எங்கும் பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது என்றால் எங்கு சென்று வாங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்றால் வாகனங்களை எப்படி ஓட்டுவது, மேக்கின் இந்தியா திட்டம் என்ன என கூறிய அவர், இருக்கிற இடத்தில் தான் அவற்றை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டு காலத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தாததன் காரணமாகவே தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டிய நிலை உள்ளதாக கிருஷ்ண சாமி அப்போது கூறினார்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...