திருப்பூரில் கனிமவள இயக்குநர் பணியிலிருந்து விடுவிப்பு - இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்

திருப்பூரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் கனிம வள இயக்குனர் பணியிலிருந்து வள்ளலை விடுவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் கனிம வள உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த வள்ளல் என்பவர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாத உதவி இயக்குனர் வள்ளலை பணியில் இருந்து விடுவித்து கூடுதல் பொறுப்பாக சச்சின் ஆனந்த் என்பவரை நியமனம் செய்தார்.



இதனை வரவேற்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...