கோவை நீலாம்பூர் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது!

கோவை நீலாம்பூர் அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதை பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த வருண் (26), நந்தகிருஷ்ணா (21), மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகம்மது அரஷத் (20) ஆகிய மூவரையும் கைது செய்து ரூ.1.80 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் அருகே உயர் ரக போதைப்பொருளை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் நடைபெற்று வரும் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் சமீபகாலமாக மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருளை பெங்களூரிலிருந்து வாங்கி வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகிக்கும் நபர்கள் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு பெங்களூரிலிருந்து மெத்தபெட்டமைன் உயர் ரக போதைப் பொருளை வாங்கி வந்த சிலரை கண்காணித்து வந்த தனிப்படை போலீசார் நீலாம்பூர் அருகே அவர்கள் வந்த போது மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த வருண் (26), நந்தகிருஷ்ணா (21), மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகம்மது அரஷத் (20) என்பதும், இவர்களில் நந்தகிருஷ்ணா, முகமது அரஷத் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்களூரிலிருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.



இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...