கோவையில் வாகன ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

கோவை போத்தனூரில் வாகன என்ஜின் ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் கடை உரிமையாளர் மீது போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாகன ஆயில் விற்பனை கடையை அணித் நிர்மல் ராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பிலான ஷெல் ஆயில்களை வாங்கியுள்ளார்.

இதற்கு உண்டான பணத்தை கொடுக்காமல் அணித் நிர்மல்ராஜ் தாமதம் செய்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தினர் கேட்டதால் நான்கு காசோலைகளை நிர்மல் ராஜ் வழங்கி உள்ளார்.

அதில் முதல் காசோலைக்கு ரூ.2 லட்சம் எடுக்கப்பட்ட நிலையில், மற்ற காசோலைகளுக்கு நிர்மல் ராஜ் வங்கியில் பணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அப்போது, அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி செய்த அணித் நிர்மல் ராஜ் மீது தனியார் நிறுவனத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....