கோவையை அடுத்த காரமடையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தேங்கும் குப்பைகளை சேகரிக்க 175 பேர் பணிப்புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திடீரென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: காரமடை நகராட்சியில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்கள் 137 பேர் என மொத்தமாக 175 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் காரமடை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக தூய்மைப்பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர். தற்போது நகராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன.

தினசரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன்னர் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். ஆனால் அவர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த அவர்கள் நகராட்சி குப்பைக்கிடங்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது எனவும், தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு சுமார் 9 மணி வரை தூய்மை பணியாளர்கள் தங்களுடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காரமடை நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், வார்டு உறுப்பினர் குருபிரசாத், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏற்கனவே பணியில் உள்ள தூய்மைப்பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும்,ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், தங்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.606 சம்பளத்தையே வழங்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....