தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் கோடைமழை 197 சதவீதம் பதிவு!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் 30 ஆண்டுகளாக சராசரியை ஆய்வு செய்யும் போது இந்த ஆண்டில் பெய்த கோடை மழை, 109 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. குறிப்பாக கோவையில் 197 சதவீதம் கூடுதலாக கோடை மழை பதிவாகியுள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக கோடைமழை பெய்துள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் 30 ஆண்டுகளாக சராசரியை ஆய்வு செய்யும் போது இந்த ஆண்டில் பெய்த கோடை மழை, 109 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. குறிப்பாக கோவையில் 197 சதவீதம் கூடுதலாக கோடை மழை பதிவாகியுள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக கோடைக்காலத்தின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது வெப்ப சலன மழை பெய்வது இயல்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விபரங்களின் படி தமிழகத்தின் கடந்த 30 ஆண்டு கோடை மழையின் சராசரி 83.5 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

நேற்று காலை வரை தமிழகத்தில், 174.9 மி.மீ., மழை பெய்துள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில் அதிக கோடை மழை பெய்து, கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, கோவையில் நேற்று காலை வரை, 321.2 மி.மீ., கோடை மழை பதிவாகியுள்ளது. கடந்த 30 ஆண்டு சராசரி மழைப்பொழிவை ஒப்பிடுகையில் 197 சதவீதம் மழை பொழிவு அதிகமாக பதிவாகி உள்ளது.

கோவையில் நேற்றும், காந்திபுரம், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, லாலி ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை பெய்து வெப்பத்தை தணித்தது.

வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:

கோவையில் கோடை மழையின் 30 ஆண்டு சராசரி அளவு 108.1 மி.மீ., ஆக இருந்தது. தற்போது வரை மட்டும், 321.2 மி.மீ., மழை பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக, கோடை மழை சராசரி பட்டியலில், கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் இருந்தது.

தற்போது கோவை முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்னும், 20 நாட்களுக்கு கோடை மழை இருக்கும் என்பதால் மழை பதிவு அதிகமாக வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக சூடான காற்றால், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...