பல்லடம் அருகே கனிம வளங்கள் கொள்ளை - லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் அதிகளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக தொடர்ந்து கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கம்பாளையம், ராசா கவுண்டம்பாளையம்,காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.



இந்த கல்குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு சாலை அமைக்கும் பணிக்காக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கனரக வாகனங்கள் மூலம் எம்சான்ட், ஜல்லி போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.



50 டன் அளவில் அதிக அளவில் எம் சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கிராம சாலைகள் வழியாக செல்வதால் ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாகவும்,

அதிகப்படியான கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபை கூட்டத்திலும் கனிம வள கொல்லையில் ஈடுபடும் கேரள வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி கேரள வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டதை கண்டித்து சுக்கம்பாளையம் வழியாக வந்த கேரளா வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...